அணுவியல் மருத்துவத்தில் தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டியாக, மேற்கு தமிழகத்தின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் (KMCH), இன்று சிம்பியா ப்ரோ.ஸ்பெக்டா ஸ்பெக்ட்/சிடி (Symbia Pro.specta SPECT/CT) என்ற அதிநவீன இமேஜிங் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த உயர்தர கருவி தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிமுகமாகும் என்றும், இந்திய அளவில் இதனைப் பயன்படுத்தும் நான்காவது மருத்துவமனையாக கேஎம்சிஹெச் வரலாறு படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SPECT மற்றும் 32 Slice CT ஆகிய இரு மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்துள்ள இந்த கருவி, உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் மற்றும் சாத்தியமான குறைபாடுகளை மிகத் துல்லியமாக மதிப்பீடு செய்யும் திறன் கொண்டது.
2011 ஆம் ஆண்டிலேயே அணுவியல் மருத்துவத்தில் முன்னோடியாகக் களமிறங்கிய கேஎம்சிஹெச், கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நவீன பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் வழங்கி வருகிறது. இப்போது அறிமுகமாகும் புதிய கருவி, இன்னும் கூர்மையான நோயறிதல் மற்றும் சிகிச்சைத் தீர்வுகளை வழங்கும்.
புற்றுநோய், இருதய நோய், மூளை செயல்பாடு, ஜீரண மண்டலப் பிரச்சனைகள், பார்கின்சன்ஸ் நோய், தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இது ஒரு முக்கிய கருவியாக அமையும்.
“தமிழ்நாட்டில் சிம்பியா ப்ரோ.ஸ்பெக்டா ஸ்பெக்ட்/சிடி-யை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” எனத் தெரிவித்தார் கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி. “இது நோயாளிகளுக்கு சிறந்த பரிசோதனைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை வழங்குவதற்கான நம்பகமான அடித்தளம்.”
மேலும், இந்த சாதனையின் பின்னணியில் பணியாற்றிய அணுவியல் மருத்துவத் துறையின் நிபுணர்கள் டாக்டர் கமலேஸ்வரன், டாக்டர் ராம்குமார், மற்றும் அவர்களின் மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறியதாவது:
“சிம்பியா ப்ரோ.ஸ்பெக்டா கருவி என்பது மருத்துவத்தின் புதிய கட்டத்தை பிரதிபலிக்கிறது. இது நோயறிதல் திறனையும், செயல்திறனையும் மேம்படுத்தும் ஆற்றல்மிக்க சாதனமாகும். நோயாளிகளின் நலனையே எங்களது முதலாவது நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”



Leave a Reply