அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25% அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி,
“விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அவர்களுக்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டுமானாலும் தயார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட (GMO) அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை” எனக் கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை சுட்டிக்காட்டி, இந்திய பொருட்களுக்கு மேலும் 25% வரி விதித்ததையடுத்து, மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. இது, உலக நாடுகளில் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள மிக அதிக வரி என்ற குற்றச்சாட்டை உருவாக்கியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது மற்றும் நியாயமற்றது என வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடியின் உரை அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு நேரடி பதிலாகவே பார்க்கப்படுகிறது, மேலும் இந்தியாவின் விவசாய நலனில் எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் இடமில்லை என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.



Leave a Reply