உப்பிலிபாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய பொது விநியோக கடை கட்டடம் – எம்.எல்.ஏ கே.ஆர். ஜெயராம் பூமி பூஜை செய்து துவக்கம்

Spread the love

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி 60 வது வார்டு உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூபாய் 25 லட்சம் நிதி ஒதுக்கி புதிதாக பொது விநியோக கடை கட்டிடம் கட்டும் பணிகளை கழக அம்மாபேரவை இணை செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னச்சாமி, மகேஸ்வரி, பகுதிகழக செயலாளர் வெள்ளிங்கிரி, செயலாளர்கள் கருப்புசாமி, சேதுவராசு, உட்பட மாவட்ட நிர்வாகிகள் எஸ் ஆர் ரவி, லிங்க ராஜ், வெள்ளிமலை, கோவிந்தராஜ், தங்கவேல், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்