13 லயன்ஸ் சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கோவை பகுதியில் நடைபெற்றது. இதில், கல்வி ஊக்கத் தொகை, தையல் மெஷின், மருத்துவ உதவிகள், முதியோர் இல்லங்களுக்கு தேவையான உதவிகள் எனக் கரிசனமான சமூக சேவை திட்டங்கள் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வழங்கப்பட்டன.
இந்த விழா, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்ட ஆளுநர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. ஜி.எஸ்.டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார் முன்னிலையில், மாவட்டத்தின் முதல் துணை ஆளுநர் செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால், ஜி.எல்.டி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினர்.
வட்டாரத் தலைவர் அருண்குமார், தலைவர் மாதவன், மாவட்ட அமைச்சரவை செயலாளர் ரவிசங்கர், மண்டல தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் விழாவினைப் சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில், கோவை வாரியர்ஸ், சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், சேலஞ்சர்ஸ், கிரியேட்டர், எண்டர் பரணர், ஸ்மார்ட் சிட்டி, மெரிட், நேரு நகர், பட்டீஸ்வரர், ராயல், பொள்ளாச்சி எக்ஸலன்ஸ், பொள்ளாச்சி ராயல், சிறு களந்தை ஆகிய 13 லயன்ஸ் சங்கங்கள் இணைந்து சமூக சேவை திட்டங்களை செயல்படுத்தின.
இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



Leave a Reply