சிவகங்கை மாவட்டம், சிறாவயல் மஞ்சுவிரட்டு நடைபெற்ற இடத்திற்கு வெளியே எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் , அறிவிப்பிற்கிணங்க, தலா ரூ. 3 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரண நிதிக்கான காசோலையினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கி, தன் சொந்த நிதியிலிருந்தும் தலா ரூ.1 லட்சம் நிதியினையும் , அன்னார்களது குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.
சிவகங்கை மாவட்டம், சிறாவயல் மஞ்சுவிரட்டு நடைபெற்ற இடத்திற்கு வெளியே, எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தில்
உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, தலா ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண நிதிக்கான காசோலையினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், நேரில் சென்று வழங்கிஇ தன் சொந்த நிதியிலிருந்தும் தலா ரூ.1 இலட்சம் நிதியினை அன்னார்களது குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறி தெரிவிக்கையில்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறாவயல் ஊராட்சியில் கடந்த 17.01.2024 அன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியின் போது, பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில், திருப்பத்தூர் வட்டம்இ கே.வலயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் ராகுல் (11) .மற்றும் மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் என்பவரின் மகன் மணிமுத்து (35). ஆகியோர் எ திர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து உயிரிழந்தது அனைவருக்கும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத்தொடர்ந்து, உடனடியாக , தமிழ்நாடு முதலமைச்சர், இரங்கல் மற்றும் ஆறுதல் செய்தியும், அன்னார்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 இலட்சம் வழங்கிடவும், தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவிடப்பட்டது.
அதன்படி, இன்றைய தினம் (19.01.2024) கே.வலயப்பட்டி மற்றும் மருதங்குடி ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று, தமிழ்நாடு முதலமைச்சர் , தலா ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ள நிவாரண நிதிக்கான காசோலை அன்னார்களது குடும்பத்தினருக்கு வழங்கி, மேலும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகிய எனது சார்பிலும் தலா ரூ.1 இலட்சம் மதிப்பீட்டிலான நிதியினையும் என ஒரு நபரின் குடும்பத்தாருக்கு மொத்தம் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் நிவாரணத் தொகையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் முன்னிலையில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஈடுசெய்ய இயலாத இழப்பிற்கு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என , கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஆனந்த் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply