நெல்லையில் கவின் செல்வ கணேஷ் தாது ஆணவப்படுகொலையை கண்டித்தும், தமிழக அரசு சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் ஏற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் சாதி ஆணவ படுகொலைக்கு தனிச் சட்டம் ஏற்ற போவதாக தெரிவித்து இருந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகக்கூடிய சூழ்நிலை தற்பொழுது வரை சட்டத்தை நிறைவேற்றவில்லை, எனவும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சட்டம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குறிப்பாக தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதி ஆணவ படுகொலை நடைபெற்று வருவதாகவும் அதற்கு தமிழக அரசாங்கம் உரிய தீர்வு எடுக்கும் இடம் என்று தெரிவித்து உள்ளனர்.
தற்பொழுது இது குறித்து முதலமைச்சரிடம் கேட்ட போது அவர் ஐ.பி.சி சட்டம் முறையில் அவர்களை தண்டிப்பதாக தெரிவித்து உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
உடனடியாக சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டத்தை ஏற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர்.



Leave a Reply