பிரதமர் மோடியை சந்திக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

Spread the love

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சந்திக்க உள்ளார்.

பிரதமருடன் அவர் முக்கிய விவாதங்களை நடத்த உள்ளார். திருச்சியில் நடைபெறும் நிகழ்வுகளின் போது, சுமார் 200க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, பிரதமரை சந்திப்பீர்களா என எழுந்த கேள்விக்கு, “பிரதமரின் பயணத் திட்டம் எனக்குத் தெரியவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

ஆனால், தற்போது வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி, இன்று இரவு 10:45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மற்றும் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் பிரதமரைச் சந்திக்க உள்ளனர்.