கோவை மாநகராட்சி அதிமுக குழு தலைவரும் 47வது வார்டு கவுன்சிலருமான பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோவை நகரில் கடந்த 19565ம் ஆண்டு நேரு ஸ்டேடியம் அருகேயுள்ள வ.உ.சி பூங்காவில் வனவிலங்குகள் சாலை உருவாக்கப்பட்டது. இங்கு, 400க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இது பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் பொழுது போக்கு அம்சமாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வ.உ.சி பூங்கா வனவிலங்கு சாலை மூடப்பட்டு விட்டது. இங்கிருந்த விலங்குகளும், பறவைகளும் சென்னை வண்டலூர் மிருககாட்சி சாலைக்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே, கோவையில் மீண்டும் வனஉயிரின பூங்கா உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ,அம்மன் கே.அர்ச்சுனன் எம்.எல்.ஏ ,கே.ஆர். ஜெயராமன் எம்.எல்.ஏ மற்றும் பி.ஆர்.ஜி அருண்குமார் எம்.எல்.ஏ ஏற்கனவே சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, மேட்டுப்பாளையம் முதல் பாலக்காடு மாவட்ட எல்லை வரை விரிந்து பரந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் வன உயிரின சராணலாயத்தை கோவை மாநகராட்சி அமைக்க வேண்டும். இது, சிறந்த சுற்றுலாத்தலமாக மாற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது



Leave a Reply