கர்நாடகாவின் விஜயபுரா APMC சந்தையில், கடந்த 10 ஆண்டுகளாக ஷாஜஹான் ஷேக் என்ற பெயரில் அமைதியான கமிஷன் ஏஜெண்டாக பணியாற்றியவர், உண்மையில் தமிழகத்தை கலுக்கிய 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான “டைலர்” ராஜா என்ற சாதிக் அலி எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த ஜூலை 9ஆம் தேதி, தமிழக தீவிரவாத தடுப்புப் படையால் (ATS) சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டார்.
1990-களில் தடைசெய்யப்பட்ட ‘அல் உம்மா’ அமைப்பின் முன்னணி தளபதியாக இருந்த ராஜா, 1998-ல் கோவையில் 58 பேர் உயிரிழந்த குண்டுவெடிப்புகளுக்கு முக்கிய பொறுப்பாளி என நீண்டகாலமாக தேடப்பட்டு வந்தார். குற்ற எண் 151/98-ல் A18 என அடையாளம் காணப்பட்ட ராஜா, குடும்பத்துடன் வசித்து வந்தாலும், உண்மையான அடையாளத்தை சாமர்த்தியமாக மறைத்திருந்தார்.
இதனுடன் இணைந்து, அதே வாரத்தில் TN ATS மற்றும் ஆந்திரா போலீஸ் இணைந்து, 1995ல் நடந்த பார்சல் குண்டு தாக்குதல் மற்றும் 1999ல் சென்னையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி மன்சூர் ஆகிய இருவரையும் கைது செய்தது. இவர்கள் தீவிரவாத இயக்கங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் என கருதப்படுகின்றனர்.
இந்தத் தொடர் நடவடிக்கைகள் ‘ஆபரேஷன் ஆரம்’ மற்றும் ‘ஆபரேஷன் அகாழி’ எனப்படும் தமிழக ATS இயக்கத்தின் கீழ் நடைபெற்ற முக்கிய வெற்றிகள் ஆகும். மனித நுண்ணறிவு, AI உதவி மற்றும் திறமையான காவல் குழுவின் செயல் மூலம், 30 ஆண்டுகளாக முடிவுறாத தேடல்களுக்கு இனி விடை கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
Leave a Reply