கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாநகராட்சி 8வது வார்டு என்ஜிபி நகர் பகுதியில் ரூ.19.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகளை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் தொடங்கி வைத்தார். உடன் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சாமி என்கின்ற குமாரசாமி, காளப்பட்டி பகுதி கழகச் செயலாளர் ராஜேந்திரன், வட்டக் கழகச் செயலாளர் குபேந்திரன், குறிஞ்சி மலர் பழனிச்சாமி மற்றும் சார்பணி பகுதி நிர்வாகிகள் மற்றும் கழக செயல்வீரர்கள் பணிக்கிடைக்கும் இடத்தில் கலந்து கொண்டனர். இந்த பூங்கா அமைப்பின் மூலம் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மேம்பாடு, மக்கள் ஓய்விடம் வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை 8வது வார்டில் பூங்கா பணிகள் துவக்கம்



Leave a Reply