கோவையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – நான்கு கட்டங்களில் நடைபெறும்!

Spread the love

கோவை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மக்கள் நலனில் கவனம் செலுத்தும் வகையில் இந்த முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளன. மொத்தமாக 334 முகாம்கள் நடைபெறவுள்ளன. முதல் கட்டம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 120 இடங்களில், இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரை 96 இடங்களில், மூன்றாம் கட்டம் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 14 வரை 96 இடங்களில், நான்காம் கட்டம் அக்டோபர் 15 முதல் 31 வரை 24 இடங்களில் நடைபெறுகிறது.

மாநகராட்சியில் 66 இடங்கள், நகராட்சிகளில் 50, பேரூராட்சிகளில் 102 மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் அருகில் 82 இடங்களில் முகாம்கள் நடைபெறும். இம்முகாம்களில் 1,694 அரசு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ சேவைகள், மகளிர் நலத்திட்டங்கள், சொத்து வரி, வரி மாற்றம், குடும்ப அட்டை சேவைகள், மின்னணு சேவைகள், காவல்துறை உதவிக் கண்கள் போன்றவை முகாம்களில் வழங்கப்படும். மக்கள் இம்முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பெற மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.