பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்புடைய பொறியியல் துறைகளின் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கான விருது வழங்கும் விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் சாரிடீஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் கே. பிரகாசன் வரவேற்புரை ஆற்றினார். 2024-2025 கல்வியாண்டில் மாணவர்கள் பெற்ற சாதனைகளை எடுத்துரைத்தார். முக்கிய விருந்தினராக இந்திய மேலாண்மை நிறுவனம், போத் கயா, பீகார் மாநிலத்தின் இயக்குநர் பேராசிரியர் வினிதா சிங் சஹாய் விழா உரையை ஆற்றினார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல், மின்சார மற்றும் மின்னணு பொறியியல், ஃபேஷன் தொழில்நுட்பம், கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல், ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி பொறியியல், மற்றும் நெய்தல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை சேர்ந்த மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.
விழாவில் 492 மாணவர்கள் பட்டங்கள், சான்றிதழ்களை பெற்றனர். மேலும், ஒவ்வொரு துறையின் முதல் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விருது வழங்கும் விழா



Leave a Reply