பாமக உட்கட்சி பிரச்சனை: ஜி.கே. மணி உருக்கம்

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள உட்கட்சி பூசல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. இன்று (ஜூலை 5) ஜி.கே. மணி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, அவருக்கு முதுகுத் தண்டு பிரச்சனை இருப்பதால் சிகிச்சை பெறுவதாக கூறினார்.

ஜி.கே. மணி கூறியதாவது, “எல்லோரும் மன உளைச்சலில் உள்ளோம். கட்சி பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும். இதற்காக ராமதாஸ், அன்புமணி இருவரும் மனம் விட்டு பேச வேண்டும். சோறு தண்ணீர் இல்லாமல் கட்சியை வளர்த்து நிறுத்தியவர் ராமதாஸ் ஐயா. அதேபோல், அன்புமணிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்து முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இரு சக்திகளும் ஒன்றிணைந்தால் கட்சி மீண்டும் வலிமை பெறும்.” என்கிறார்.