கோவை நைட்டிங்கேல் கல்வி குழும மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள நைட்டிங்கேல் நர்சிங் கல்லூரியில் ஜூலை 04 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் சஞ்சய் பாஸ்வான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் தொடக்கத்தில், பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மாணவ மாணவியர்கள் நிகழ்த்தி காட்டினார்.
அதனைத் தொடர்ந்து, நைட்டிங்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் மனோகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவின்போது சிறப்புரையாற்றிய மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், மக்களுக்காக உழைப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் சஞ்சய் பாஸ்வான், நர்சிங் சேவையின் மகத்துவம் பற்றி எடுத்துரைத்து மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
இவ்விழாவில், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், நைட்டிங்கேல் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



Leave a Reply