புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையம் திறப்பு – முதல்வர் காணொளி வாயிலாக தொடக்கம்

Spread the love

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் மாநிலம் முழுவதும் நகர்ப்புற மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை, தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இதற்கமைய, கோவை மாநகராட்சிக்குட்பட்ட காளப்பட்டி பகுதியில் புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையம் திறக்கப்பட்டது. இந்த மையத்தை எட்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் விளாங்குறிச்சி பகுதி கழக பொறுப்பாளர் திரு. விஜயகுமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242C மாவட்ட GST ஒருங்கிணைப்பாளர் லயன் ச.செந்தில்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு. ரகுபதி, திரு. மோகன் ரங்கநாதன், எட்டாவது வார்டு செயலாளர் திரு. வினோத், திரு. சின்னத்தம்பி, திரு. நவீன், திரு. செந்தில் வேல், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு. சந்திரன் மற்றும் இன்ஜினியர் திரு. குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மையத்தில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களில் மருத்துவர் டாக்டர் K. மனோஜ், செவிலியர் V. சந்தியா, சுகாதார ஆய்வாளர் S. அபினேஷ் மற்றும் மருத்துவ பணியாளர் S. மதன் குமார் உள்ளனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நிகழ்வில் பங்கேற்று புதிய மையத்தின் பயன்பாட்டை வரவேற்றனர்.