2026-ல் கோவை முழுவதும் திமுக வெற்றி உறுதி – செந்தில் பாலாஜி

Spread the love

கோவை பீளமேடு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்,” என தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் பா.ஜ.கவால் பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தமிழகத்தில் ஓரணி அரசு பலத்தோடு செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 11.58 லட்சம் குடும்பங்களை நேரில் சந்தித்து, திமுக செய்த சாதனைகள் மற்றும் பா.ஜ.க அரசு மேற்கொண்ட துரோகங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜூலை 3ஆம் தேதி, கோவையின் 3,117 பூத்களில் இந்தப் பிரச்சார பணிகள் தொடங்கவுள்ளன. மேலும், 10 லட்சம் பேர் திமுகவில் உறுப்பினராக இணைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

இளைஞர்களின் ஆதரவு திமுகவுக்கே என்பதை வலியுறுத்திய அவர், “புதிய கட்சிகள் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று கூறியவர்கள் இன்று அவர்கள் பக்கம் சென்றுள்ளனர்” என்றும் விமர்சித்தார்.

அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மீட்டுள்ளதாகவும், கோவைக்கு உகந்த பெருந்திட்டங்கள் – பெரியார் நூலகம், தங்க நகை தொழிற்பேட்டை, சாலை மேம்பாடுகள் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.