பார்க் கல்விக் குழுமத்திற்கு டிரையல் பிளேசர்ஸ் விருது!

Spread the love

ஒரு குறிப்பிட்ட துறையில் புதுமையான அல்லது முன்மாதிரியாக முயற்சிகளை ஏறெடுத்து வெற்றி கண்ட  தனிநபர்கள் அல்லது அமைப்புகளை டிரையல் பிளேசர்ஸ் விருது அங்கீகரிக்கிறது.

இந்த விருதுகள் பெரும்பாலும் புதிய தரங்களை அமைத்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த வகையில் பார்க் கல்விக் குழுமத்தின் முன்னாள் மாணவர்கள் ஏரோஸ்பேஸ் துறையில் இருந்தாலும்,  சமீபத்தில் வெற்றி கண்ட சந்திரயான் – 3 திட்டத்தில் பார்க் கல்விக் குழுமத்தின் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறையின் முன்னாள் மாணவர்கள் 6 பேர் பணியாற்றி இருப்பதற்காக அந்த நிறுவனத்திற்கும் அந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர். அனுஷா ரவிக்கும் இந்த  டிரையல் பிளேசர்ஸ் விருதினை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இந்த விருதை பெற்ற பிறகு இது டாக்டர் அனுஷா ரவி பற்றி கூறும் பொழுது இந்த விருது, இந்த நிறுவனத்தின் உழைப்பிற்கும் முன்னாள் மாணவர்களின் அறிவுத்திறனுக்கும் கிடைத்த அங்கீகாரம் என்று தெரிவித்தார்.