தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாரம்பரியப் பண்பாட்டு விழாவாகப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பட்டிமன்றம், கிராமிய நடனங்களோடு பொங்கல் வைத்துக் கொண்டாடிய மாணவிகள் பொங்கல் விழாவின் அங்கமான உறியடித்தலில் ஆர்வத்தோடு பங்கு கொண்டனர். பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தையும் பொங்கல் வைக்கும் முறையையும் இன்றைய இளம் தலைமுறை அறிந்து கடைபிடித்தது பாராட்டத்தக்கதாக இருந்தது. கல்லூரியெங்கும் வண்ணக் கோலங்களோடு மாணவிகளின் மகிழ்ச்சி ஆரவாரமும் சேர்ந்து பொங்கல் விழா களைகட்டியது.
Leave a Reply