கோவையில் சிறப்பு போலீசார் ரயில்களில் பயணிகளோடு, பயணம் செய்து கண்காணித்து வந்தனர் .
இந்த நிலையில் இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வடமாநிலத்திலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் இரயிலில் பெட்டியில் பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர்.
திருப்பூரிலிருந்து இரயில் கோவையை வந்த போது முன்பதிவு பயணிகள் பெட்டியில் போலீசார் சோதனர்.
அப்போது பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போது ஒரே ஒரு மூட்டை மட்டும் தனியாக இருந்தது . இது யாருடைய மூட்டை என்று போலீசார் அங்கு இருந்த பயணிகளிடம் விசாரித்தனர். விசாரணையில் அது தங்களுடையது இல்லை என்று அனைவரும் கூறினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டையை திறந்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 8 கிலோ கஞ்சா அதில் இருந்தது. கஞ்சா மூட்டையை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக எடுத்து வந்த வாலிபர் போலீசார் சோதனை நடந்து கொண்டு இருப்பதை பார்த்ததும் அதை அப்படியே போட்டு விட்டு பயணிகள் கூட்டத்தில் கலந்து வெளியேறி விட்டார். இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.



Leave a Reply