, , ,

76வது குடியரசு தினவிழா – தேசிய கொடியை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்.

republic day
Spread the love
நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டார். தொடர்ந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் சமாதானத்தை பசைசாற்றும் விதமாக வெண் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அணி வகுப்பு நடத்திய அணித்தலைவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும் சுதந்திர போராட்ட தியாகியர், தியாகியர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்ப்பட்ட 142 அரசு அலுவலர்கள், 45 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும், 61 மாநகர காவல்துறையினர், 34 மாவட்ட காவல்துறையினருக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை சரக டிஐஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.