இந்தியாவைச் சேர்த்து மாலத்தீவு, இலங்கை, ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். உலக சமையல் கலைஞர்கள் சங்கத்தின் (WACS) அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் முதல் கலினரி போட்டி என்ற சிறப்பையும் இந்நிகழ்வு பெற்றது.
போட்டியில் பழம் மற்றும் காய்கறி உருவச்சிற்பம், பெட்டி ஃபோர்ஸ் & ப்ரலின்ஸ், பிளேட்டட் அபிடைசர்ஸ், மூன்று அடுக்குகளான கல்யாண கேக், ரெஸ்டாரன்ட் மற்றும் விருந்தகம் அலங்காரம் மற்றும் காக்டெயில்ஸ் & மாக்டெயில்ஸ் என பல பிரிவுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மைத் துறை மாணவர்கள் சிறப்பாக பங்கேற்று 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் மற்றும் பல சிறப்பு சான்றிதழ்கள் வென்றனர்.
வெற்றியாளர்கள் பட்டியலில், சமீமா டி.எப் தன் திறமையை பல்வேறு துறைகளில் வெளிப்படுத்தி, இனிப்பு வகை போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் நேரடி இனிப்பு சவாலில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், நேரடி கேக் அலங்காரத்தில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார்.
சஞ்சய் பிரவீன் பி தனது கலைநயத்தை வெளிப்படுத்தி, பழம் மற்றும் காய்கறி சிற்பம் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.சம்யுக்தா ராஜு தனது திறமையால் இனிப்பு வகை போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ருக்கையா ஜுசர், அலங்கார பேக்கரி சிற்பம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தார்.அதேபோல், ரிஷி எஸ்.ஜே தனது சமையல் திறமையால் உணவு ஆரம்பம் வகை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
நிகழ்வின் முதல் நாளில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம், செஃப் சௌந்தரராஜன், கிரேக்க கடவுள்கள் மற்றும் பரதநாட்டியக் கலைஞரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வெண்ணெய் சிற்பங்கள் பார்வையாளர்களை ஈர்த்தன. மூன்று அடுக்குகளாக செய்யப்பட்ட கல்யாண கேக்குகள் பாரம்பரியம், நவீன கலைநயம் மற்றும் அழகிய வடிவமைப்பை வெளிப்படுத்தின.
போட்டியின் போது பேசிய சிகா தலைவர், பத்மஸ்ரீ விருதுபெற்ற செஃப் தாமு கூறியதாவது:
“இந்த ஆண்டு 22 பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. அதில் புதியதாக காப்பி, பரோட்டா மற்றும் பிரியாணி சவால்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பல கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்பது, இளம் சமையல் கலைஞர்களை உருவாக்கும் எங்கள் நோக்கத்துடன் ஒத்துப் போகிறது,” என்றார்.
ஒன்பது நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தப் போட்டியில் நடுவர் பணியாற்றினர். இது, எதிர்கால சமையல் கலைஞர்களுக்கு திறமை, அறிவு, அனுபவங்களை வளர்க்கும் அரிய வாய்ப்பாக அமைந்தது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் சாதனையை அறங்காவலர் திரு. சுந்தர் ராமகிருஷ்ணன், முதல்வரும் செயலாளருமான டாக்டர் பி.எல். சிவகுமார் ஆகியோர் வாழ்த்தினர். துறைத் தலைவர் திரு. ஆர். ராஜன் மற்றும் பேராசிரியர்கள் வழங்கிய ஊக்கம், மாணவர்களின் வெற்றிக்கு ஆதாரமாக இருந்தது



Leave a Reply