![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் எப்போ வருவாரோ
எப்போ வருவாரோ’ ஆன்மிக சொற்பொழிவு
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ‘எப்போ வருவாரோ’ 2024 19வது ஆண்டு ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று பேச்சாளர் பாரதி பாஸ்கர் ‘ராமானுஜர்’ குறித்து பேசினார்.இந்நிகழ்ச்சியில் அருள் வளர்செம்மல் விருது வழங்கப்பட்டது, திருப்பூர் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி திருக்கோவில் பக்தர்கள் சங்கத் தலைவர் கார்த்திகேயன், ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், சரவணம்பட்டி ஸ்ரீ கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் தலைவர் நாகராஜன், திருப்பூர் சேக்கிழார் புலிதப் பேரவைத் தலைவர் மூர்த்தி, குருக்கள் பட்டி ஸ்ரீ கடைமடை அய்யனார் ஸ்ரீ கருப்புசாமி திருக்கோவில் தலைவர் முருகேசன் ஆகியோருக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணன் மற்றும் பேச்சாளர் பாரதி பாஸ்கர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
19ஆம் ஆண்டு விழாவில் முதல் நாளான இன்று பட்டிமன்ற பேச்சாளர் ஆன்மீக சொற்பொழிவாளர் பாரதி பாஸ்கர் , அருளாளர் இராமானுஜர் குறித்து சொற்பொழிவாற்றினார்.
மேலும் நிகழ்ச்சியில், பாரதீய வித்யா பவன் பள்ளி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, டைனமிக் நடராஜன் மற்றும் ஆன்மீக பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Art, Blog, Chennai, Coimbatore, Entertainment, General, india, Madurai, Madurai, special, Spiritual, Tamilnadu
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் எப்போ வருவாரோ ஆன்மிக சொற்பொழிவு

Leave a Reply