சென்னை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண பணிகளை துவக்கி, உடனடியாக ஆறாயிரம் ரூபாய் வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் முகம்மது ரபி கோவையில் தெரிவித்துள்ளார்..
பல் சமய நல்லுறவு இயக்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் காந்தி தலைமையில் சாய்பாபா காலனி பகுதியில் ராஜா அண்ணாமலை அலுவலகத்தில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி , மாநிலத் தலைவர் முகமது ரபி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய , பல் சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் முகம்மது ரபி,
சமீபத்தில்,சென்னை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண பணிகளை தொடங்கி இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பவும், மேலும்,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகையாக ஆறாயிரம் ரூபாய் வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்..
தொடர்ந்து பேசிய அவர், இந்திய நாடு என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பது எனவும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அன்பு அமைதி நல்லிணக்கம் மட்டுமே வளர்ச்சிக்கு உதவும் என குறிப்பிட்ட அவர்,மதங்களை கடந்து மனித நேயத்தை வளர்த்த வேண்டும் என கேட்டு கொண்டார்..
இந்நிகழ்ச்சியில், பல் சமய நல்லுறவு இயக்கத்தில் பல்வேறு நிலை நிர்வாகிகள், கே எம் ரவி அபுதாகிர் ,ராதாகிருஷ்ணன், கோட்டை செல்லப்பா, இஸ்மாயில், சுலைமான், சலீம், சஞ்சய், பாபுலால் சுக்ருல்லா பாபு உட்பட பல கலந்து கொண்டனர்
Leave a Reply