போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு, சிறுமியை கொலை செய்து உடலை எரித்ததற்காக தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமினில் வெளியில் வந்த தஷ்வந்த், அதே ஆண்டு தன் தாயை கொலை செய்ததாக போலீசார் குற்றம் சாட்டினர் மற்றும் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதன்பின், தாயை கொன்ற வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்தை விடுதலை செய்தது.
இதனிடையே சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால், தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தெரிவித்ததாவது, வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமான ஆதாரமாக இல்லை மற்றும் டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை.



Leave a Reply