கடந்த மாதம் 29 ஆம் தேதி திமுக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி தலைமையில், சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும் இருக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதனையொட்டி வரும் ஜுலை 6 ஆம் தேதி புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக திமுக சட்டநிர்வாகிகள் கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply