நுகர்வோரின் மின் கட்டணம் ரூ.5 ஆயிரத்திற்கு மேல் என்றால், அந்த மின் கட்டணத்தை காசோலை, டி.டி. மட்டும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரத்திற்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெற கூடாது. எனவே தமிழக மின்சார வாரியம் முதலில் ரூ,20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் பெறக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. அதன்பின் இது ரூ,10 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 83 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ரூ,10 ஆயிரம் என்ற ரொக்கம் இனி ரூ.5 ஆயிரமாக அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி மின் அலுவலக கவுண்ட்டர்களில் இனி ரூ.5 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மற்றும் டிஜிட்டல் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
5ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் என்றால் டிஜிட்டல் மூலமே செலுத்த வேண்டும்…… – மின்சார வாரியம் அறிவிப்பு……!



Leave a Reply