Spread the love

“பார்க்” இளம் புதுமை கண்டுபிடிப்பாளர் உச்சி மாநாடு 2024

கோவை அக்டோபர் 14,2024 : பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், டாக்டர் APJ அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பார்க் புதுமை கண்டுபிடிப்பு தூதுவர்கள், “இன்னோவேஷன் சப்மிட் 2024” என்ற “பார்க் இளம் புதுமை கண்டுபிடிப்பாளர்” உச்சி மாநாட்டை அறிமுகப்படுத்தினர்.

இந்த உச்சி மாநாடு, மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின் புதுமை கண்டுபிடிப்பு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த உச்சி மாநாட்டில், மாநிலம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்களுக்கு கல்லூரியில் தங்குமிட வசதி வழங்கப்படும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புகளின் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் புத்தாக்க யோசனைகளை சமர்ப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

1. மருத்துவ தொழில்நுட்பம் – நோயறிதல், சிகிச்சை மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமை சுகாதார தீர்வுகள்
2. விண்வெளி தொழில்நுட்பம் – விமானம் மற்றும் விண்வெளி ஆய்வுகளை மேம்படுத்தும் புதுமை தொழில்நுட்பத் தீர்வுகள்
3. பெண்கள் தொழில்நுட்பம் – பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாலின இடைவெளிகளைக் குறைக்கவும் புதுமை தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள்
4. பசுமை தொழில்நுட்பம் – நிலத்தின் தன்மையை மேம்படுத்துவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், சுற்றுச்சூழல் காப்பதற்கும் புதுமை தொழில்நுட்பத் தீர்வுகள்

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பதிவு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 14, 2024. உச்சி மாநாடு நவம்பர் 22, 2024 அன்று நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வரை பரிசுகள் வழங்கப்படும். இந்த உச்சி மாநாட்டின் ஒட்டுமொத்த சாம்பியனுக்கு வெற்றி பெரும் மாணவருக்கு ரூபாய் 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

அறிமுக விழாவில் பேசிய பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷ்கா ரவி பார்க் புதுமை கண்டுபிடிப்பு தூதர்களின் முயற்சிகளை பாராட்டினார் அனைத்து ஆராய்ச்சி பணிகளுக்கும் கல்லூரியின் ஆதரவை உறுதி செய்தார். மேலும் அவர் தனது உரையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்பே எதிர்காலத்திற்கான வழி என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பதிவு செய்வதற்கான தொலைபேசி எண் 9994608779

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *