கோவை சுந்தராபுரத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நடைபெறும் ஊழல்,FL2 மதுபான கடையை அகற்றக் கோரி, போத்தனூர் சுந்தராபுரம் சாலை சீரமைக்க கோரி, குறிச்சி மயானத்தை சீரமைக்க கோரி உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுந்தராபுரம் பகுதி அமமுக செயலாளர் பாசறை ரமேஷ், சுந்தராபுரம் பாஜக மண்டல தலைவர் ஜே முகுந்தன், கோவை தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் கே சுகுமார், மாநில பாஜக அமைப்புச் செயலாளர் மா பா ரோகிணி, ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கே மணிமாறன், பாஜக 98 வது டிவிஷன் தலைவர் எம் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன், “விடியா திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போத்தனூர் சுந்தராபுரம் பகுதியில் சாலைகள் சரி செய்யாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர். வெள்ளலூர் குப்பை கடையில் தீப்பிடித்து எறிந்தால் அது அணைப்பதற்கு மக்கள் வரி பணத்தை பல லட்சக்கணக்கில் அரசு அதிகாரிகள் கொள்ளையடித்து வருகிறார்கள்.
திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கக்கூடிய சொர்க்கமாக அந்த குப்பை கிடங்கு அமைந்துள்ளது அதை வைத்து அவர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறி இருந்த நிலையில் தற்பொழுது வீதிக்கு வீதி FL-2 பார்களை திறந்து வருகிறார்கள். ஒவ்வொரு FL-2 பார்களுக்கு 80 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு பார்களுக்கு அனுமதி வருகிறார்கள்.
மேலும் கோவில் திருவிழாக்களுக்கு இரவு 10 மணி வரை அனுமதி கொடுக்கிறார்கள் ஆனால் பார்களுக்கு மட்டும் நள்ளிரவு 12 மணி வரை அனுமதி கொடுக்கிறார்கள். சுடுகாட்டுக்குள் சென்றால் உள்ளே பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் உள்ளதால் உள்ளே சென்று இனங்களை அடக்கம் செய்யாத சூழல் ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.
Leave a Reply