, , ,

39 ஆண்டுகளாக விற்பனையில் முதலிடத்தில் இருந்த மாருதி ரக கார் : 2024ல் டாடா பஞ்ச் முதலிடம்

tata punch
Spread the love

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் மாருதிதான். கடந்த 40 ஆண்டுகளாக இந்திய கார் சந்தையில் மாருதி நிறுவனம் 40 சதவிகிதத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.கடந்த 39 ஆண்டுகளாக இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் ரகங்கள் மாருதி நிறுவனத்தின் தயாரிப்பாகவே இருந்தது.
1985 முதல் 2004 வரை மாருதி சுசூகி 800 கார் விற்பனையில் முதலிடத்தில் இருந்தது. 2005 முதல் 2017 வரை மாருதி ஆல்டோ விற்பனையில் முதலிடத்தை பிடித்தது. 2018 மாருதி சுசூகி டிசையர், 2019 மாருதி சுசூகி ஆல்டோ, 2020 மாருதி சுசூகி ஸ்விப்ட் 2021 மாருதி சுசூகி வேகன் ஆர் 2022 மாருதி சுசூகி வேகன் ஆர், 2023 மாருதி சுசூகி ஸ்விப்ட் முதலிடத்தில் இருந்தது.
மாருதி சுசூகி தயாரிப்புகள் இத்தனை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த தருணத்தில் முதன்முறையாக மாருதி நிறுவனத்தை அசைத்து பார்த்துள்ளது டாடா மோட்டார்ஸ். ஆம், கடந்த 2024 ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தின் தயாரிப்பான டாடா பஞ்ச் இந்திய அளவில் விற்பனையில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 2,02,031 டாடா பஞ்ச் ரக கார் விற்கப்பட்டுள்ளது.மாருதி சுசூகி வேகன் ஆர் 1,90,855 விற்பனையுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மிடில் கிளாஸ் மக்களை கவரும் வகையில் செமி எஸ்.யூ.வி ரக காராக பஞ்ச் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த ஆண்டிலேயே அதாவது 2022 ஆம் ஆண்டு 2 லட்சம் பஞ்ச் கார்கள் விற்பனையானது. பெட்ரோல்,எலக்ட்ரிக், சி.என்.ஜி வரைட்டிகளில் இந்த கார் கிடைக்கிறது. 6.13 லட்சத்தில் இருந்து 14. 29 லட்சம் வரை இந்த ரக கார் விற்பனையாகிறது.