நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 2538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை (ஆகஸ்ட் 6) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பங்கேற்று, நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். தேர்வு செய்யப்பட்டவர்கள் உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்கிறார். அரசு முதன்மை செயலாளர் முனைவர் கார்த்திகேயன் வரவேற்று பேச உள்ளார். மேலும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விழாவில் பங்கேற்கின்றனர்.
முதலமைச்சரின் வருகையை உற்சாகமாக வரவேற்கும் வகையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த விழா, தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சிகளில் மேலும் ஒரு முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது.



Leave a Reply