2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே பாமக தலைவர்: தேர்தல் ஆணையம்

Spread the love

பாமக தலைவர் பதவி தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் வழங்கியுள்ளது. வரும் 2026 ஆகஸ்ட் 1 வரை அன்புமணியே பாமகவின் தலைவர் என ஆணையம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம், “கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தலைவராகத் தேர்வு செய்துள்ளனர்; தேவையான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன” என தெரிவித்துள்ளது. மேலும், தலைவர் பதவி குறித்த எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இருப்பின், நீதிமன்றத்தை அணுகலாம் என ராமதாசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *