20 ரூபாய் தண்ணீர் பாட்லை 100க்கு விற்பது ஏன்? – கிடுக்கிப்பிடி போட்ட உச்சநீதிமன்றம்

Spread the love

பெரிய ஹோட்டல்களுக்கு சாப்பிட சென்றால், ரூ.20 தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்பார்கள்.ஆனால், ‘தண்ணீர் பாட்டில் வேண்டாம். டம்ளரில் தண்ணீர் தாங்க’ என்று கேட்க கூச்சப்பட்டு, அந்தத் தண்ணீர் பாட்டிலிலேயே தண்ணீர் குடித்துவிடுவோம். பில்லில் வரும் பாட்டிலுக்கான அதிக விலையை எதுவும் பேசாமல் கட்டிவிட்டு வருவோம்.

இது தண்ணீர் பாட்டிலுக்கு மட்டுமல்ல… உணவுவகைகளுமே சற்று கூடுதலான விலையுடன் தான் இருக்கும். இதுப்போக, அந்த ஹோட்டலின் சர்வீஸ் பிடித்திருக்கிறது என்று சர்வீஸ் வரியும் கட்டிவிட்டு வருவோம்.இது பெரிய ஹோட்டலில் சாப்பிடும் 99 சதவிகிதம் பேர் கடந்துவரும் ஒரு விஷயம்.

கடந்த மார்ச் மாதம் ஒரு வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “உணவகங்கள் கட்டாயமாகவும், மறைமுகமாகவும் சேவைக் கட்டணத்தை பில்களில் வசூலிக்கக்கூடாது. இது பொது நலனுக்கும், வர்த்தக நடைமுறைக்கும் எதிரானது” என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து உணவகங்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா விசாரித்தனர் .அவர்கள் கூறியதாவது “உணவுகள், அனுபவம் மற்றும் விருந்தோம்பலைப் பொறுத்து உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பில் வசூலிக்கிறது.உங்கள் உணவகத்திற்கு வருகை தரும் நபர் அனுபவிக்கும் அனுபவத்திற்காக, நீங்கள் எம்.ஆர்.பி யை விட அதிகமாக வசூலிக்கிறீர்கள். மேலும் வழங்கப்படும் சேவைக்கான சேவைக் கட்டணங்களையும் வசூலிக்கிறீர்கள். குறிப்பிட்ட வகையான அனுபவத்திற்கான சூழலை வழங்குவது நீங்கள் வழங்கும் சேவைகளை உள்ளடக்காதா? இது எங்களுக்குப் புரியவில்லை.அப்போது அதிலேயே சேவைக் கட்டணத்தையும் உள்ளடக்கிவிட வேண்டும். உதாரணத்திற்கு, உணவகங்கள் ரூ.20 தண்ணீர் பாட்டில்களுக்கு ரூ.100 வசூலிக்கிறீர்கள். ஆனால், கூடுதல் 80 ரூபாய் வழங்கப்படும் அனுபவத்திற்காக என்பதை நீங்கள் குறிப்பிடுவதில்லை. சூழல் அல்லது அனுபவத்தை வழங்குவது சேவைக்கான ஒரு பகுதியாகும். நீங்கள் எம்.ஆர்.பிக்கும் அதிகமாக விற்கிறீர்கள், தனியாக, சேவைக்கும் வசூலிக்கிறீர்கள். அப்போது அந்த ரூ.80 எதற்காக?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.