16 ஆயிரம் பெண்கள் பங்கேற்று வள்ளி கும்மி நடனமாடி உலக சாதனை படைத்த நிலையில் அவர்களுக்கு கோவை கொடிசியா மைதானத்தில் பாராட்டு விழா

Spread the love

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளரும் கொங்கு கலை குழு தலைவர் வடக்கே கே சி பாலு மற்றும் அகட்சியின் மாநில துணைச் செயலாளர் நித்தியானந்தம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்

அப்போது பேசிய நித்தியானந்தம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த ஆண்டு 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்று வள்ளி கும்மி நடனமாடி உலக சாதனை படைத்த நிலையில் அவர்களுக்கு கோவை கொடிசியா மைதானத்தில் பாராட்டு விழா

ஏப்ரல் 6 ம் தேதி மாலை நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சான்றிதழ்களை வழங்க உள்ளார்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில் பத்தாயிரம் பெண்கள் பங்கேற்று வள்ளிக்கும்மி நடனமாட இருக்கிறார்கள்

தமிழக அரசு பாரம்பரிய கலைகளுக்கும் கிராமிய கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆண்டுதோறும் விழா எடுத்து வருகிறார்கள். அதில் வள்ளி கும்மியும் இடம் பெற்று இருக்கிறது என்பது அனைவருக்கும் பெருமை தரத்தக்கது

கொங்கு நாடு கலைக்குழு என்ற ஒன்று துவங்கி அதன் தலைவராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே கே சி பாலு தலைவராக இருந்து வருகிறார்

கொங்கு கலைக்குழு சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேருக்கு மேல் பார்வையாளர்களாக வர உள்ளனர்

தமிழக முதலமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட தமிழக அமைச்சர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்

இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர்

இந்த கலை மூலமாக பெண்கள் ஒழுக்கமுள்ளவர்களாக கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள் இதன் மூலமாக வீடு வீட்டுக்கு ஊரு ஊருக்கு மகிழ்ச்சி என்ற ஒரு அளவில் மாபெரும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது

வள்ளி கும்மி கலை ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என்று இல்லை கடந்தாண்டு நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 ஆயிரம் பெண்களும் பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்

கொங்கு நாடு கலை குழு என்ற பெயரில் தான் நடத்துகிறோமே தவிர குறிப்பிட்ட சாதியையோ அமைப்பையும் சார்ந்து செயல்படுத்தவில்லை