,

1500 பேருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

nirmala sitharaman
Spread the love

நாட்டில் ஜன்தன் யோஜனா மூலம்  29.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு – கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இணைந்து இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்ட ஏழை – எளிய பெண்கள் 1500 பேருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பயனாளிகளுக்கு  இலவச தையல் இயந்திரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் ஆற்றிய தலைமை உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், “தொழில், வர்த்தக நகரமான கோவையில் பெண்கள் எதிர் காலத்திற்கு உதவும் வகையில், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எடுத்து உள்ள முயற்சி பாராட்டுக்குரியது. இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் திறமை, படிப்பு இருந்தாலும் வாய்ப்புகள் கிடைக்கும் போது அதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழில் செய்யும் திறமை மற்றும் தன்னம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். பிரதமர் மோடி நாட்டில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கு அந்த நிலம் மூலம் எப்படி பயன் அடைவது என தெரியவில்லை. பிரதமர் மோடி பெண்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் தரும் வகையில் திட்டங்களை அளித்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் மந்திரியின்  ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டில் 60 சதவீதம் பெண்களுக்கு வங்கி கணக்கு துவங்கி உள்ளனர். இது பெண்கள் பொருளாதார முறையில் முன்னேற்றம் அடைய வழி செய்கிறது. நாடு முழுவதும் 59 கோடி பேருக்கு வங்கி கணக்கு உள்ளது. இதில், 29.6 கோடி பெண்கள் வங்கி கணக்கு வைத்து உள்ளனர். இதில் , தமிழ்நாடு 94 லட்சமும், கோவையில் 5 லட்சம் பேர் வங்கி கணக்கு வைத்து உள்ளனர். மேலும், ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் 2.6 லட்சம் பெண்கள்,  சுரக்ஷா திட்டத்தில் 7 லட்சம் பெண்கள், அட்டல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒரு லட்சம் பெண்கள் பயன் அடைந்து உள்ளனர். மேலும், முத்ர திட்டத்தில் 15 லட்சம் பேர், ஸ்டாண்ட் அப் திட்டம் மூலம் 2,549 பேர் லோன் பெற்று உள்ளனர். கோவையில் சாலையோரம் வியாபாரிகள் திட்டத்தில் 12 ஆயிரம் பெண்களுக்கு லோன் வழங்கி உள்ளோம். பெண்களுக்கு திறன் மேம்பாட்டு குறித்த பயிற்சி 311 சென்டர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில், கோவை கவுண்டம்பாளையம் பெண்கள் ஐ.டி.ஐ யில் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த பயிற்சி மையத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.” என்று  பேசினார்.