11ம் வகுப்பு பொது தேர்வு ரத்து

Spread the love

புதிய மாநில கல்விக்கொள்கையின்படி, தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் இருந்து 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ரத்தாகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில் மாற்றம் இல்லை.

அது திட்டமிட்டபடி நடைபெறும். 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் இருக்கும். அதில் மாற்றம் கிடையாது. இருமொழி கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும். மும்மொழிக்கொள்கை என்ற விஷயத்துக்கும் இடமில்லை. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.