100 நாள்கள் கடந்த டிரம்ப ஆட்சி: சாதனையா ?சோதனையா ? வேதனையா ?

Spread the love

அமெரிக்க அதிபராகத் தனது 100வது நாளை நிறைவு செய்த டொனால்ட் ட்ரம்ப், தனது ஆட்சியில் பல பரபரப்பான முடிவுகளை எடுத்துள்ளார். அவர் எடுத்த முக்கியமான முடிவுகள் குறித்த சுருக்கம் இங்கே வெளியிடப்படுகிறது.

முக்கியமான 10 முடிவுகள் கீழே காணப்படுகிறது:

புதிய வரி திட்டங்கள்
அமெரிக்காவில் கனடா, மெக்சிகோ, சீனாவுடன் வர்த்தகக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய வரிகள் அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

சட்ட விரோத நடவடிக்கைகள்
சட்டப்பிரிவினை மீறியவர்களுக்கு எதிராக, அமெரிக்காவில் பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன் விளைவாக சர்வதேச அளவில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அரசுப் பணியாளர் திட்டம்

பல அரசுப் பணியாளர்களை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இஸ்ரேலுக்கு ஆதரவு
பாலஸ்தீனுக்கு எதிராக, அமெரிக்கா இஸ்ரேலுக்கு பரஸ்பர உதவியை வழங்கியது சர்ச்சையானது. இதனால் உலகளவில் பெரும் கவனம் பெற்றது.

மாணவர்களின் கல்வி நிதி
அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்த டிரம்ப். அந்தக் கல்வி நிறுவனங்களுக்கான நிதியை நிறுத்தி வைத்தார். இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ரஷ்யா-உக்ரைன் போரின் பாதிப்புகள்
ரஷ்யா-உக்ரைன் போர், அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளையும் பாதித்துள்ளது. டிரம்ப்பின் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டால் சர்ச்சை ஏற்பட்டது. அனைத்து நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்த டிரம்ப, ரஷ்யா மீது மட்டும் எந்த வரியையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘கோல்ட் கார்டு’ விசா திட்டம்
அமெரிக்காவில் 5 மில்லியன் முதலீடு செய்வோருக்கு கோல்ட் கார்டு விசா வழங்கும் திட்டத்தை டிரம்ப் அறிமுகம் செய்தார். ஒரு புறம் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கை; மறுபுறம் பணக்காரர்களுக்கான சலுகை என பல சரச்சையான முடிவுகள் எடுத்துள்ளார் டிரம்ப்.

பாலின வேறுபாட்டில் கட்டுப்பாடுகள்
பாலின அடிப்படையில், பல அரசியல், சமூக மற்றும் ஆட்சி நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குடியுரிமை சட்ட மாற்றங்கள்
அமெரிக்காவில் பிறப்பதற்கான குடியுரிமைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய உத்தரவுகள் வெளியிடப்பட்டன.

பரஸ்பர வரி திட்டம்
உலகின் பல நாடுகளுக்கான பரஸ்பர வரி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் முன்னேற்றம் பெற்றுள்ளன.

இத்தகைய பரபரப்பான நடவடிக்கையால், அமெரிக்காவை மட்டுமல்ல், உலகத்தையே பரப்புக்கு உள்ளாக்கி வருகிறார். இவரின் அதரடியான நடவடிக்கையால், அமெரிக்கா பங்குச் சந்தை மட்டுமல்ல், இந்த பங்குச் சந்தையும் டிரம்ப்பின் ஆட்டத்துக்கேற்க ஆட்டம் கண்டு வருகிறது என்று கூறினால், அது மிகையாகாது.
100 நாள்கள் நடந்த டிரம்ப ஆட்சி, சாதனையா ?சோதனையா ? வேதனையா ? என மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.