கேரளா லாட்டரி துறை சார்பில் ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல்கள் நடத்தப்படுகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி பம்பர் லாட்டரியான பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 12 கோடி பரிசுத் தொகைக்கானது.
இதன் குலுக்கல் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டது. JC 325526 என்ற எண்ணுக்கு பரிசு விழுந்தது. முடிவு வெளியான ஒரு நாள் கழித்து கொல்லத்தை சேர்ந்த லாட்டரி ஏஜண்டை தொடர்பு கொண்ட தினேஷ்குமார் அந்த டிக்கெட் தன்னிடத்தில் இருப்பதாக கூறினார். தினேஷ் குமார் லாட்டரி சப் ஏஜண்ட் ஆவார். அந்த வகையில், கொல்லம் பஸ்ஸ்டாண்டிலுள்ள ஜெயக்குமார் லாட்டரி கடையில் 10 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதில், ஒரு டிக்கெட்டுக்குதான் 12 கோடி பரிசு கிடைத்துள்ளது. தினேஷ்குமார் வரி மற்றும் ஏஜண்டு கமிஷன் போக போக 6.18 கோடி கிடைக்கும்.
Leave a Reply