ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி, கோயம்புத்தூர், கல்லூரி நாள் மற்றும் கலை விழா வேலுமணியம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது. எஸ். என். ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர், நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு மாநில மருந்தாளுநர் கவுன்சிலின் தலைவரும், டெல்வின் ஃபார்முலேஷன்ஸ் பிரைவேட்லிமிடெட், சென்னையின் நிறுவனர் மற்றும் இயக்குநருமான ஜே. ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.ஸ்ரீராம் நிறுவனத்தின் ஆண்டறிக்கை-2024-25 ஐ வழங்கினார்.
கல்லூரி கலை விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கல்லூரி இதழை ஜெ. ஜெயசீலன் வெளியிட எஸ். என். ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் பெற்று கொண்டார். “Textbook for B. Pharmacy VI semester- Short Question and Answer” என்ற தலைப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஆர். ஜெயப்பிரகாசம் எழுதியபுத்தகத்தை எஸ்.சுந்தர். வெளியிட்டார்.
பின்னர் சிறப்பு விருந்தினர் ஜெ. ஜெயசீலன், எஸ். சுந்தர், நிர்வாக அறங்காவலர், எஸ். நரேந்திரன், இணை நிர்வாக அறங்காவலர், எஸ். என். ஆர். சன்ஸ் அறக்கட்டளை, ஆகியோர் கல்வி சார் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எம். கோபால் ராவ் வரவேற்புரை வழங்கினார். மருந்தியல் கல்லூரியின் கலை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சோனியா ஜார்ஜ் நன்றியுரை வழங்கினார்.
Leave a Reply