,

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

sri ramakrishna hospital
Spread the love

விபத்து மற்றும் அவசரகால நேரங்களில், மருத்துவ சேவைகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வந்து சேர்வதை உறுதி செய்வதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

நிகழ்ச்சியில் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் உடனிருந்து, ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்களின் பங்கு குறித்து விளக்கினர். அவசர சிகிச்சை பிரிவு ஆலோசகர் டாக்டர். என். மஞ்சுநாதன், மிகப்பெரும் விபத்தின் ஆரம்ப கால நிலையை கையாளும் முறை பற்றியும் நோயாளிகளின் மருத்துவ  உதவி தேவையின் அவசரத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்துதல் பற்றி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விளக்கினார்.

மேலும் , அவசர சிகிச்சை பிரிவு ஆலோசகர்  டாக்டர் எம். பார்த்திபன் “கோல்டன் ஹவர்”-ன் உடனடி மருத்துவ உதவியின் அவசியம், அடிப்படை உயிர்காக்கும் நுட்பங்கள் மற்றும்  விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முறையான  மருத்துவ உதவி போன்ற செயல்முறைகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். கோவையில் உள்ள சுமார் 70 ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.