ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ஏஐசிடிஇ நிதியுதவியுடன் பயிற்சி

Spread the love

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஏஐசிடிஇ அடல் நிதியுதவியுடன் ஆறு நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி டதொடங்கியது.

வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சித் திறன்களை வளர்ப்பதற்கு அடுத்த தலைமுறைக்கான தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பிலான இப்பயிற்சியில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 50 பேர் பங்கேற்றனர். புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய ஆய்வு அமர்வுகளை வழங்குவார்கள். இந்த நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் தொழில் திறனை வளர்ப்பதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்ட செயல்முறைக் கலந்துரையாடல்கள், நேரடி அமர்வுகள் மற்றும் விவாதங்கள் இடம்பெறும்.

சென்னை, அசென்ச்சர் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஹெல்த் பிசினஸ் பிரிவின் துணைத் தலைவர் டாக்டர் ஜி. ஹரிபிரகாஷ் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா  தலைமையுரையாற்றினார். தேசியக் கல்விக் கொள்கையின் குறிக்கோள்களான தரமான கல்வி மற்றும் புதுமைச் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் கல்லூரியின் தொடர் முயற்சிகளின் அங்கமாக, கல்வியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் தலைசிறந்த கல்வியை வழங்கவும் வல்லதாக இந்தப் பயிற்சி அமைந்தது.