கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 35வது மாணவர் மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது.
கோவையில் உள்ள டிலாய்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் வித்யா கனகராஜன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்லூரியின் மாணவர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பொறுப்பாளர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
அவர் பேசும்போது, தெளிவும் உறுதியும் தான் நம் தொழிலிலும் வாழ்க்கையிலும் வெற்றிபெற உதவும். பெண்கள் தங்களுக்கான குறிக்கோளை வகுத்துக் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் முயற்சித்து தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண்கள் பலவிதக் கடமைகளையும் பொறுப்பேற்றுத் திறம்படச் செய்யவல்லவர்கள். அத்தகைய ஆற்றல் மிக்க பெண்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் பிறரும் முன்னேறத் துணை நிற்பார்கள் என்று குறிப்பிட்டார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ராவின் வழிகாட்டுதலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்றப் பொறுப்பாளர்கள், தங்களுடைய பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதாக உறுதிமொழியேற்றனர். கலைநிகழ்ச்சிகளுடன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மாணவர் மன்றத் தொடக்கவிழா



Leave a Reply