கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் ஈஸி டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர்.
இந்த ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் ஈசி டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ பத்மநாபன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையில் இன்டர்ன்ஷிப், பயிற்சிகள், நடைமுறைத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை வடிவமைத்தல், பயிற்சி ப்பட்டறைகள், கருத்தரங்குகள், ஆய்வு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த முடியும்.
இதனால் தொழில் துறையின் தேவைக்கேற்ற வகையில் எங்கள் கல்லூரி மாணவிகளின் திறமைகளை மெருகேற்ற இயலும் என்றார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஈஸி டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Leave a Reply