, ,

​ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பூட் கேம்ப்

boot camp
Spread the love

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெண்களை  ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) ஆகியவற்றில் மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு  பூட்கேம்பை ஏற்பாடு செய்தது.

கோயம்புத்தூரில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் ரோஹினி கிருஷ்ணன், பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் மாற்றியமைக்கும் தாக்கத்தைப் பற்றி விவாதித்து மாணவிகளை ஊக்கப்படுத்தினார்.

கல்லூரி முதல்வர் டாக்டர். கே. சித்ரா தனது தலைமையுரையில் ட்ரீம் என்ற சொல்லின் சுருக்கத்தை வலியுறுத்தினார். மாணவர்களை பெரிய கனவு காணவும், வெற்றிகரமான வாழ்க்கையை நோக்கிச் செயல்படவும் ஊக்குவித்தார். இந்நிகழ்வில் நைம் டூல்ஸ், ஏஆர்/வி ஆர் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றுடன் கூடிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.​ பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பங்கேற்று பயனடைந்தனர்.