ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மாணவர் நலச்சங்கம்  அறிமுக விழா

Spread the love

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மாணவர் நலச்சங்கம்  அறிமுக விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார். எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர்  தலைமை  தாங்கினார்.

பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி திரு கே எஸ் சதிஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு    மாணவர் நலச்சங்கம் மாற்று அதன் சார்பு மன்றங்களை  துவக்கி வைத்து பேசும் போது  மாணவர்கள்  ஆராய்ச்சி, விளையாட்டு ,தொழில் முனைவோராக பயிற்சி பெற்றிருக்கும் மாணவர்கள்  மற்றும் தனிநபர் சாதனைகளை குறிப்பிட்டு வாழ்ந்து தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் பல்வேறு பிரிவுகளில் நம்முடைய மாணவர்களின்  முன்னேற்றம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை தெளிவாக விவரித்தார்.

கல்லூரியின் ஸ்டுடென்ட்  ஆப்யர் செல் டீன் பெருமாள் , ப்ரொபஷனல் சொசைட்டி பொறுப்பாளர் பேராசிரியர் மதிவாணன் அனைத்து ஸ்டூடண்ட் கிளப் பொறுப்பாளர் பேராசிரியர் பாலமுருகன்,  ஆறு நிர்வாக குழு உறுப்பினர் மற்றும்   ஆறு செயற்குழு உறுப்பினர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர். மேலும் இந்த மாணவர் மன்றம் மற்றும் அதன் சார்பு மன்றங்கள் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கி கூறினர். மாணவ மாணவியர்களின் நலன்  காக்கவும், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைகள் முழுவதும் உள்ள வாய்ப்புகள் பற்றிய கருத்தை மேம்படுத்துதல் ,கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுதல்  மற்றும் விளையாட்டு துறை என பல்வேறு துறைகளில் மாணவர்களின் பங்கு மற்றும் அதன் சார்ந்த நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினர்.

முன்னதாக , மவுண்ட் எவெரெஸ்ட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சாதனை  புரிந்த முன்னாள் மாணவி நௌசிதா பானு கௌரவிக்கப்பட்டார் .விழா முடிவில் ஸ்டுடென்ட்  ஆப்யர் செல்  அஸோஸியேட்  டீன் தீபா நன்றி கூறினார்