, , , ,

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு சிறந்த தொழில் மற்றும் கல்வி சேவையாளர் விருது

sri ramakrishna engineering college
Spread the love

கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு தொழில்துறை மற்றும் கல்வித்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக விருதுகள் வழங்கப்பட்டது.
புதுடில்லியில் நடை பெற்ற இந்திய தொழில் துறை கூட்டமைப்பு மற்றும்  பாட்னர்ஷிப் விருது வழங்கும் விழாவில் டைமண்ட் வின்னர் என்ற விருதினை தொழில் மற்றும் கல்வி கூட்டான்மையில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்டது.
மேலும் கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில், சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக சேவை புரிந்தமைக்காக இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் சார்பாக கல்வித் துறையில் சிறந்த சேவையாளர் விருது வழங்கப்பட்டது.
தொழில்துறை மற்றும் கல்வித் துறையில் சிறப்பு, புதுமை மற்றும் முழுமையாக திறன் வளர்ப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு புதுமைகளின் கண்டுபிடிப்புகள் சிறந்து விளங்கியதற்காக கருத்தில் கொண்டு விருதுகள் வழங்கப்பட்டன.
விருது வழங்கும் விழாவில், கல்லூரியில் துணை முதல்வர் கருப்புசாமி, தொழில்துறை ஆலோசகர் கணேஷ் பேராசிரியர்கள், வேல்முருகன் மற்றும் ரவீன் ஆகியோர் கல்லூரி சார்பாக விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
விருது பெற்றவர்களை எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் அறங்காவலர் ஆர். சுந்தர், கல்வித்துறை இயக்குநர் முனைவர் என்.ஆர். அலமேலு, முதல்வர் முனைவர் ஏ.சௌந்தர்ராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.