ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஏ. சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்று உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை குறித்து பேசினார்.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் டாக்டர் என்.ஆர். அலமேலு வாழ்த்துரை வழங்கினார். பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் விஞ்ஞானியுமான டாக்டர். முகமது அஸ்லாம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார் அமெரிக்காவின் இ.ஐ.டி 2.0 இன் தலைமை நிர்வாக அதிகாரி ஜோ மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு துணைத் தலைவர் சிவகுமார் ஆகியோர் தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் மற்றும் இன்குபேட் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் வீணா ரமேஷ், அமர்நாத், நவீன், சமீர் டாக்டர். பெருமாள் மற்றும் டாக்டர் செந்தில் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இறுதியில் ,இன்குபேஷன் மையத்தின் வணிக மேம்பாட்டு மேலாளர் ட திருக்குறள்கனி நன்றி கூறினார்.
Leave a Reply