கோவை வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 26 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சௌந்தர்ராஜன் அனை வரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் தலைமை தாங்கினார் . எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் முனைவர் என்.ஆர். அலமேலு சிறப்புரை ஆற்றினார்.
முதலாம் நாள் விழாவில், சுந்தரம் கிளேட்டன் லிமிடெட், நிறுவனத்தை சேர்ந்த தலைமை தகவல் அதிகாரி, சங்கர் விஸ்வநாதன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல்,எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் , பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சிவில் இன்ஜினியரிங் ஆகிய துறைகளை சேர்ந்த 530 பேருக்கு பட்டம் வழங்கினார்.
இரண்டாம் நாள் நடைபெற்ற விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக ஐபிஎம், குவாண்டம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் டாக்டர். எல். வெங்கட சுப்ரமணியம், கலந்துகொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங், ஏரோனாட்டிகள் இன்ஜினியரிங், ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் ,எம். பி. ஏ, மற்றும் முதுகலை துறையை சேர்ந்த 503 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.
மேலும் துறைகளின் சார்பில் முதல் மதிப்பெண் பெற்ற 11 பேருக்கு தங்கப்பதக்கங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழாவில் துணை முதல்வர் ப கருப்புசாமி, துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 26 வது பட்டமளிப்பு விழா

Leave a Reply