கோவை பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் 2023-2024 ம் கல்வியாண்டின் அறிவியல் மன்ற துவக்க விழாவானது அறிவியல் மற்றும் மனித நேய துறை சார்பாக கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் ஷரிமான் பின் அபூபக்கர், அறிவியல் மன்ற இதழ் – 2023 ஐ வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவின் சிறப்புரையைக் கல்லூரி முதல்வர் முனைவர் மு. பால்ராஜ் மற்றும் வரவேற்புரையை அறிவியல் மற்றும் மனித நேயத்துறை தலைவர் முனைவர். வெ. சித்ரா ஆகியோர் வழங்கினார்கள். இந்த விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் அறிவியல் மன்ற துவக்க விழா

Leave a Reply