கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கல்லூரி கலையரங்கில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார்.
தேகா ஆர்கானிக்ஸ் நிறுவனர் ஆர்த்தி ரகுராம், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் மேம்பாட்டு மைய சாதனை மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து, மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, மகளிர் மேம்பாட்டு மைய செயலர் முனைவர் ஆர்.ரேகா வரவேற்றார்.
மகளிர் மேம்பாடு மைய மாணவத் தலைவி ஸ்ரீநிதி ராமன் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள், 1000 – க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வினை கல் லூரியின் மகளிர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர்கள், மாணவப் பிரதிநிதிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

Leave a Reply