கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச ஆண்கள் தினம் கல்லூரியின் அகத் தரமதிப்பீட்டுக் குழுவின் (IQAC) சார்பில் கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் 1992ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பா் 19 ஆம் தேதி சா்வதேச ஆண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சா்வதேச ஆண்கள் தின விழா நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவா் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் ஆண் பேராசிரியர்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து பேராசிரியர்களுக்கான புதையல் வேட்டை போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் இரண்டு அணியினருக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் கல்லூரியின் ஆண் பேராசிரியர்கள் மற்றும் அக தர மதிப்பீட்டுக் குழு (IQAC) ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ஐ. பா்வீன் பானு, முனைவர் வி.கிருஷ்ணபிரியா மற்றும் அக தர மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Leave a Reply